Azhagiyale - A DEYO Musical // Stephen Zechariah // Ddesign

Описание к видео Azhagiyale - A DEYO Musical // Stephen Zechariah // Ddesign

A DEYO Musical
Composed & Produced By DEYO
Sung By Stephen Zechariah
Lyrics By Pradas S .Agnya
Keys - Sagishna Xavier
Guitar - Keshav Ram
RECORDING STUDIOS - KADE PRODUCTIONS (AUSTRALIA) & AMUSYNC STUDIO (SRI LANKA)
RECORDING ENGINEERS - DEYO & KAPILAN
MIXED & MASTERED AT Ethnic Rhodes

D.O.P | EDITING | DIRECTION - DENOJAN
STARRING - LAVEEN SINNARAJAH & NARVINIDERY
SINGAPORE SHOTS DIRECTED BY SURIAVELAN & D.O.P BY ARAN HARI
CAST - MR. & MRS. SINNARAJAH | SUTHAN | ANUSHA | DEYO | STEPHEN ZEHARIAH
SPECIAL THANKS TO JOE FILM CREW | MR. RAVICHANDRAN | MRS. VAANI

Lyrics

அடி சூளிப்பெண்ணே தூர் அழகே..
அள்ளிப்போவதென்ன
தொலைவினில் மேகம்
நீலித்திமிர்கொண்ட அழகியளே...
தள்ளிச்செல்ல செல்ல
கூடுது மோகம்..

அடி சூளிப்பெண்ணே தூர் அழகே..
அள்ளிப்போவதென்ன தொலைதூரம்...
நீலித்திமிர்கொண்ட அழகியளே...
சொல்லிச்செல்வதென்ன விழியோரம்..

எனையீர்க்கும் பார்வையிலே
புதிரான சிறுதுளியே
உயிர்சாய்க்கும் அழகினிலே
அரிதான பெண்ணழகே!
அடடா விழியில் நுழைந்து
சில்லிடும் வெயிலே
விரலினிடையே
சுடர்விடும் மழையே
(அடி சூளிப்பெண்ணே தூர் அழகே..)

மாயத்-துளி போலே நீ பேச
காலப்பெரு-வெளியே இளைப்பாறும்
ஆழத்துளை போலே கூர்விழியா
மாயமென்ன போதை தலைக்கேறும்
நெற்றிமுகட்டில் முடிக்கற்றை இரண்டு
சரிந்துவிழும் தோரணை அழகை -அட
எப்படி சொல்ல அதை என்னன்று சொல்ல
அய்யையோ அதுபோலொரு கவிதை
கண்ணுறங்க காதலி மடிதேடும்
கைதியென ஆவேனோ
சின்னஞ்சிறு விரலால் நீ மோது
கைக்குழந்தை நான்தானோ....
(அடி சூளிப்பெண்ணே தூர் அழகே..)

மோனத்தருணம் நீ வீசும்
பார்வைகளும் போதை எனக்கூடும்
தோள்கள் உரசும் காதணியும்
தூண்டுகிற வாதை பரிகாசம்
கட்டிலறையில் (உன்)தாபம் தீர்க்கும் -அதி
காலைத் தலையணை மேலே
ஒற்றைநொடியில் எட்டித்தெறிக்கும்
அஃறிணை கோபங்கள் வருமே
நித்தமொரு பிணியில் தடுமாறும்
ஏக்கங்களும் கலைவாயோ
சத்தமிடும் இதயம் துணைத்தேடும்
ஏகாந்தம் நீயே தீர்ப்பாயோ

(அடி சூளிப்பெண்ணே தூர் அழகே..)

Комментарии

Информация по комментариям в разработке